Categories
மாநில செய்திகள்

மக்களே….! மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி…. உடனே கிளம்புங்க….!!!

உலகிலுள்ள பண்டைய காலத்தில் பாரம்பரிய கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலக பாரம்பரிய தினம் கடைபிடித்து வருவதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட பிரதான சின்னங்கள் இன்று மாலை 6 மணிவரை இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதிகளில் காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத், புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்து மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் குறித்த நூலை வெளியிட்டார்.

Categories

Tech |