தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை விடாமல் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மழைக் காலங்களில் மக்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லக் கூடாது. அதுகுறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின் வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடி மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியில் தஞ்சம் புகாதீர்கள். காங்கிரட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.