Categories
தேசிய செய்திகள்

மக்களே மகிழ்ச்சி செய்தி…! கொரோனாவுக்கு புதுவித மாஸ்க்…. அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!

கொரோனாவில்  இருந்து பாதுகாக்க புதுவித மாஸ்க் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டில் தொடங்கி தற்போது ஒட்டுமொத்த உலகையும் ஆட்டி வரும் கொரோனா வைரசில்  இருந்து பொதுமக்களை காப்பாற்ற அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை  உலக நாடுகள் தொடர் நடவடிக்கையாக செயல்படுத்தி வருகின்றன. மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டாலும் கொரோனா  மக்களை பாதிக்க தான் செய்கிறது.

அதனால் பொது இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் இந்திய விஞ்ஞானிகள் புதுவித மாஸ்க் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். அதாவது தாமிரத்தை அடிப்படையாகக் கொண்ட நானோ துகள்கள் பூசப்பட்ட இந்த மாஸ்க் ஆரம்ப நிலையிலேயே பாக்டீரியா மற்றும் தொற்றுக்களை, அழிக்கும் திறன் படைத்தவை எனவும் எளிதில் மக்கும் திறன் கொண்டவை எனவும்  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மாஸ்க்  அணிபவர்கள் சுவாசிப்பதற்கு ஏதுவாகவும்  அடிக்கடி துவைத்து பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது  என அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த புது  வித மாஸ்க்  விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |