மாற்றித்திறனாளிகள் பாதையில் பொதுமக்கள் நடக்கக்கூடாது என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.
பிரபல கட்சியான மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மிகவும் பிரபலமான மெரீனா கடற்கரைக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டு களிக்க வேண்டும் என்பதற்காக நமது தமிழக அரசு சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மரத்தால் ஆன நிரந்தர பாதையை அமைத்துள்ளது. இந்த பாதை 263 மீட்டர் நீளமும் 3 மீட்டர் அகலமும் கொண்டது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் மிகவும் மகிழ்ச்சியாக இந்த பாதையில் வந்து செல்கின்றனர். ஆனால் இதை அனைவரும் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் உதவிக்கு வருபவர்கள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். மேலும் ஒரு சிறந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்டுள்ள இந்த பாதை சேதம் ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுமக்களும் இதனை அறிந்து அந்த பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.