நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, சில தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.
ஆனால் மக்கள் அலட்சியத்துடன் சுற்றி திரிவதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால், பொது மக்கள் அலட்சியமாக வெளியே செல்வதாக நடிகர் அமிதாப்பச்சன் வேதனை தெரிவித்துள்ளார். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிருங்கள், கைகளை நன்றாக கழுவுங்கள், முக கவசம் அணியுங்கள், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.