Categories
தேசிய செய்திகள்

மக்களே…. போஸ்ட் ஆபிஸில் சூப்பரான திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதார நிலையில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போது பொதுமக்கள் வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் பணத்தை சேமித்து வைக்க தொடங்கி உள்ளனர். அந்த அடிப்படையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட போஸ்ட் ஆஃபீஸின் சிறு சேமிப்பு திட்டங்கள் மக்களை அதிகளவில் ஈர்த்துள்ளது. ஏனெனில் குறைந்த மாதாந்திர தொகை செலுத்தி நல்ல வட்டியுடன் சிறப்பான முதிர்வுத் தொகையை பெறலாம். இந்நிலையில் மற்ற சேமிப்பு முறைகளை விட இந்த மாதிரியான சிறுசேமிப்பு திட்டத்தில் எந்த ஒரு ரிஸ்க் இல்லை என மக்கள் அறிந்துள்ளனர்.

போஸ்ட் ஆபிஸில் இருக்கக்கூடிய மக்களால் அதிகம் வரவேற்பு பெற்ற சிறுசேமிப்பு திட்டங்கள் டைம் டெபாசிட் திட்டம், ரெக்கரிங் டெபாசிட், பொது வருங்கால வாய்ப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் , தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் போன்ற திட்டங்களாகும். இந்த திட்டங்களின் வட்டி மற்றும் சேமிப்பு தொகை விவரங்களை பற்றி பார்ப்போம். இந்த நாமினேஷன் தேர்வு மாத தொகை அனைத்தும் வாடிக்கையாளர்கள் விருப்பம் போல் தேர்வு செய்யவும் வசதியுள்ளது.

டைம் டெபாசிட் திட்டம்

நபரின் முதல் சேமிப்பு தொகை 1000 ரூபாயாக தொடங்கலாம். இந்த திட்டத்திற்கு 5.5% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடைய இரட்டிப்பு காலம் 10.75 வருடம் ஆகும்.

ரெக்கரிங் டெபாசிட் திட்டம்

நபரின் முதல் சேமிப்பு தொகை 100 ரூபாயாக தொடங்கலாம். இந்த திட்டத்துக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடைய இரட்டிப்பு காலம் 12.41 வருடம் ஆகும்.

போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம்

நபரின் முதல் சேமிப்பு தொகை 1000 ரூபாயாக தொடங்கலாம். இந்த திட்டத்துக்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடைய இரட்டிப்பு காலம் 10.91 வருடம் ஆகும்.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்

இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறப்பான திட்டமாகும். நபரின் முதல் சேமிப்பு தொகை 250 ரூபாயாக தொடங்கலாம். இந்த திட்டத்துக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடைய இரட்டிப்பு காலம் 9.47 வருடம் ஆகும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்

நபரின் முதல் சேமிப்பு தொகை 1000 ரூபாயாக தொடங்கலாம். இந்த திட்டத்துக்கு 6.8% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடைய இரட்டிப்பு காலம் 10.59 வருடம் ஆகும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

நபரின் முதல் சேமிப்பு தொகை 1000 ரூபாயாக தொடங்கலாம். இந்த திட்டத்துக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடைய இரட்டிப்பு காலம் 9.73 வருடம் ஆகும்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டம்

நபரின் முதல் சேமிப்பு தொகை 1000 ரூபாயாக தொடங்கலாம். இந்த திட்டத்திற்கு 6.9% வட்டி வழங்கப்படுகிறது. இதனுடைய இரட்டிப்பு காலம் 124 மாதங்கள் ஆகும்

Categories

Tech |