பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர், இயக்குனராக அறிமுகமான படம் ஜென்டில்மேன். இந்தப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது. அதில் அர்ஜுன், கவுண்டமணி, செந்தில், மதுபாலா மற்றும் மனோரமா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜென்டில்மேன் வெற்றியை தொடர்ந்து காதலன், காதல் தேசம் மற்றும் ரட்சகன் உள்ளிட்ட பிரம்மாண்டமான படங்களை கேடி.குஞ்சுமோன் தயாரித்துள்ளார். கடைசியாக 1999 ஆம் ஆண்டு என்றென்றும் காதல் படத்தை தயாரித்தார்.
23 ஆண்டுகள் கழித்து 2020 ஆம் ஆண்டு மீண்டும் படம் தயாரிக்க முடிவு செய்து ஜென்டில்மேன் 2 படத்தை தயாரிக்க போவதாக அறிவித்தார். மேலும் ஜென்டில்மேன் படத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டமாக இந்த படம் இருக்கும் என்று தகவல் வெளியாகியது. ஆனால் அதன்பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் ஜென்டில்மேன் 2 படத்தின் இசையமைப்பாளர் யார் என்று சரியாக கணிக்கும் முதல் மூன்று பேருக்கு தங்க நாணயம் பரிசாக கிடைக்கும் என்று கேடி. குஞ்சுமோன் அறிவித்துள்ளார்.