Categories
தேசிய செய்திகள்

மக்களே….! பெட்ரோல் விலையின் அடுத்த ஆட்டம் இனி ஆரம்பம்….. அதுவும் இந்த வாரமே…..!!!! 

இந்த வாரத்தில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையே போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணவீக்கமும் அதிகரித்து விலைவாசி ஏறியுள்ளது. போர் பதற்றம் தற்போது தணிந்து இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலருக்கு மேல் நீடித்து வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.3 சதவீதம் அதிகரித்து 112.31 டாலராக உள்ளது. கச்சா எண்ணெய் மீது ஐரோப்பிய யூனியன் விதித்த தடை தொடர்ந்து நீடித்து வருவதால் இந்த இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு தொடர்ந்து ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

பதற்றத்தின் காரணமாக மே 6ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வதற்கான அறிகுறிகள் தெரிவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை பயங்கரமாக உயர்ந்து வருகிறது. அடுத்தகட்டமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் பணவீக்கம் அதிகரித்து விலையும் உயரும். இதனால் மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |