தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிசை வீடுகளையும் அகற்றிவிட்டு அனைத்து மக்களுக்கும் காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் கடந்து 2015-ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 2.75 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் கூட மாநில அரசு திட்டத்திற்கான நிதியை ஒதுக்குகிறது.
அதாவது மத்திய அரசு 60 சதவீத நிதியை ஒதுக்கும் நிலையில் மாநில அரசு மீதமுள்ள 40% நிதியை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் படி 25 சதுர மீட்டர் அல்லது 269 சதுர அடிகள் கொண்ட கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது. இதில் ஒரு வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, கழிப்பிடம் ஆகியவை உள்ளது. மேலும் வீடு கட்டுவதற்கான தொகை 4 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் நமது தமிழ்நாட்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளர்களுக்கு மானியம் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. தற்போது அவர்களுக்கு மானியம் வழங்குவதற்காக 912 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு சார்பில் 547 கோடியும் மாநில அரசின் பங்காக 365 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.