சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கண்டு பொதுமக்கள் பயப்பட வேண்டியதில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில்கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தான் பிறகு குறையும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சென்னையில் தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது.
எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மாநகராட்சி சார்பாக தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கபட்டு வருகிறது. எனவே மக்கள் அதை கடைபிடிக்க வேண்டும். மேலும் நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.