அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றான நம்மிடம் உள்ள ஆதார் கார்டு உண்மைதானா என்று இதுவரையிலும் யோசித்தது உண்டா? தற்போது நம்மிடம் உள்ள ஆதார் கார்டு உண்மையானது தான் என்பதை கண்டுபிடிக்க சில வழிகள் இருக்கிறது. அதை பின்பற்றுவதன் வாயிலாக ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை அறியலாம். இ-ஆதாரில் உள்ள கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாக ஆதார் கார்டின் நம்பகத்தன்மையை தெரிந்துக்கொள்ளலாம். முன்னதாக இ-ஆதாரிலிருந்த கியூ ஆர் குறியீடு ஆதார் ண் வைத்திருப்போரின் மக்கள் தொகைத் தகவல்களை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் தற்போது யூஐடிஏஐ இ-ஆதாரில் கியூஆர் கோடில் புது பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளது.
இப்போது அவற்றில் மக்கள் தொகையுடன் சேர்த்து ஆதார் எண் வைத்திருப்பவரின் புகைப்படமும் இருக்கிறது. கியூஆர் கோட் ஸ்கேனரைப் பயன்படுத்துவதன் வாயிலாக ஆதாரில் நடைபெறும் எந்த ஒரு மோசடி முயற்சியையும் எளிதாகக் கண்டறியலாம். அதாவது விண்டோஸ் பயன்பாடு (டெஸ்க்டாப்/லேப்டாப்களுக்கு): https://uidai.gov.in/images/authDoc/UIDAI_Secure_QR_Code_Reader_4.0.msi என்பதன் வாயிலாக கண்டறியலாம். புது கியூஆர் குறியீட்டின் வாயிலாக குறிப்பு ஐடி, பெயர், பாலினம், பிறந்ததேதி, மொபைல்எண், மின் அஞ்சல், முகவரி மற்றும் புகைப்படம் ஆகிய உங்களது தனிப்பட்ட தகவல்கள் சேமிக்கப்படும்.
யூஐடிஏஐ-ன் கியூ ஆர் குறியீடு செயலியை டவுன்லோடு செய்து ஸ்கேனரைப் பயன்படுத்தி ஆதார், இ-ஆதார், எம்-ஆதார்-இன் பாதுகாப்பான கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். கியூ ஆர் குறியீடு UIDAIல் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்டதும், உங்களது தனிப்பட்ட விபரங்கள் காண்பிக்கப்படும். ஹேண்ட் ஹோல்ட் ஸ்கேனர் சாதனம், இ-ஆதாரிலுள்ள பாதுகாப்பான க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதற்கும், மக்களின் விபரங்களை காண்பிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் ஆதார் தொடர்பான சந்தேகங்களுக்கு 1947என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் (அ) [email protected] எனும் மின் அஞ்சல் முகவரியின் வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம்.