கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். இதனை அடுத்து நகைக்கடன் எப்போது செய்யப்படும் என்றும் மக்களிடையே எதிர்பார்த்து எழுந்து வருகிறது.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நகைக்கடனை தள்ளுபடி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுவிட்டன. மேலும் நகையை திருப்பி கொடுப்பதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு விட்டது. எனவே பொங்கல் பண்டிகைக்கு நகைகள் திரும்ப கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.