Categories
மாநில செய்திகள்

மக்களே!…. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…. இந்த 11 ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்கலாம்…..!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆதார் கார்டு, 100 நாள் வேலை திட்டம் அட்டை, புகைப்படத்துடன் உள்ள வங்கி அட்டை, அஞ்சல் கணக்கு அட்டை, மருத்துவ காப்பீடு, ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் பதிவீட்டின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம் என இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |