Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( ஜன.27)…. ‘இந்த பகுதிகளில் கரண்ட் கட்’…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் நாட்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் பொன்னேரி பகுதியில் உள்ள இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று ( ஜனவரி 27 ) இருளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கோவை மாவட்டம் :-

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக இன்று ( 27-01-2022 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் அதன்படி பொள்ளாச்சி நகரம், சின்னாம்பாளையம், ஊஞ்ச வேலம்பட்டி, திப்பம்பட்டி, அம்பராம்பாளையம், புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், கெங்கம்பாளையம், சங்கம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி, மாக்கினாம்பட்டி, ரங்கசமுத்திரம், சூளேஸ்வரன்பட்டி, அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம், ஜோதிநகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

திருவண்ணாமலை மாவட்டம் :-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி துணைமின் கோட்டத்திற்குட்பட்ட மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி ஆரணி , தச்சூர் , மருசூர், விண்ணமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

சிவகங்கை மாவட்டம் :-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) துணை மின் நிலையத்தில் இன்று (ஜன. 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை புதுவயல், கண்டனூா், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீா்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது.

நெல்லை மாவட்டம் :-

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தச்ச நல்லூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தச்சநல்லூர் நல் மேய்ப்பன் நகர் தெற்கு பாலபாக்யா நகர் வடக்கு பாலபாக்யா நகர் மதுரை சாலை சிந்துபூந்துறை மணிமூர்த்தீஸ்வரம் ஆகிய பகுதிகளில் இன்று (ஜன. 27) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

விருதுநகர் மாவட்டம் :-

விருதுநகர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம்பெறும் பகுதிகளான ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, ரோசல்பட்டி ரோடு, கம்மாபட்டி, சத்யமூர்த்தி ரோடு, பாண்டியன் நகர், பட்டேல் ரோடு, ஏ.ஏ.ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, பேராசிரியர் காலனி, சாஸ்திரி நகர், ரயில்வே பீடர் ரோடு மெயின் பஜாரில் தெப்பம் வரை, காசுக் கடை பஜார், காந்திபுரம் தெரு, அழகர்சாமி தெரு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அதேபோல இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி கிழக்கு, மேற்கு, சத்திரரெட்டியபட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

அதேபோன்று மல்லாங்கிணறு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின்நிலையத்தில் மின் வினியோகம் பெறும் பகுதிகளான மல்லாங்கிணறு, வலையங்குளம், நந்திகுண்டு, மேல துலுக்கன்குளம், கெப்பிலிங்கம்பட்டி, அழகியநல்லூர், வரலொட்டி, வழுக்கலொட்டி, நாகம்பட்டி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, வேலாயுதபுரம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு உள்ளிட்ட பகுதிகளில் வரும் 29-ஆம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, பெரிய புளியம்பட்டி, பரமேஸ்வரி மில், வெம்பூர், பந்தல்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படும்.

தேனி மாவட்டம் :-

தேனி மாவட்டம் கண்டமனூா், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஜன. 28) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கண்டமனூா், அம்பாசமுத்திரம், ஸ்ரீரங்காபுரம், தப்புக்குண்டு, கோவிந்தநகரம், வெங்கடாச்சலபுரம், எம். சுப்புலாபுரம், ஜி. உசிலம்பட்டி, சித்தாா்பட்டி, கணேசபுரம், ஜி. ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் இன்று (ஜன. 27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் துரைசாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். முன்னதாக புதன்கிழமை மின்தடை என அறிவிக்கப்பட்டு தற்போது வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |