Categories
மாநில செய்திகள்

மக்களே தயக்கம் வேண்டாம்… உறுதியாக இருங்க… தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை…!!!

மக்கள் யாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் கொள்ள வேண்டாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக திருமதி தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா  மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின் சீனியர் காவல் சூப்பிரண்ட் அதிகாரியான நிகரி பார்ட் தலைமையில் நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவருக்கு அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது அதிகாரிகளுடன் ஆலோசனையை முடித்துவிட்டு ஆளுநர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்குள்ள மருத்துவர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து கேட்டு, பின் அங்குள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தபோது, அவர் கூறியதாவது,காரைக்கால் மாவட்டத்தில் மக்கள்  கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டி வந்த நிலையில், அம்மாவட்ட ஆட்சியரும் மற்றும் அவருடன் காவல் அதிகாரிகளும், மற்றும் அங்கு பணிபுரியும் மருத்துவர்களும் முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இதன் காரணமாக  அம்மாவட்ட பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதில்  ஆர்வம் காட்டி வருவதாகவும், இதனால் 25 சதவீத மக்களுக்கு இந்த குழந்தை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் யாரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.இந்தியாவில் பயன்படுத்தப்படும் கொரானா தடுப்பூசிக்காக 24 நாடுகள் காத்துக் கொண்டிருப்பதாகவும் ஒரு கோடி பேருக்கு மேல் இந்தியாவில் குழந்தை தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என்று கூறினார். எனவே பொதுமக்கள் தயக்கமின்றி தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்கள் ஆளுநரிடம், நியமன எம்.எல்.ஏ க்களை, பாஜக என்று ஆளுநர் கூறியது  வரலாற்றுப் பிழை என அம்மாநில முதலமைச்சர் திரு .நாராயணசாமி குற்றம் சாட்டை  பற்றி அவரிடம் கேட்டபோது, அதற்கு அவர், நான் வரலாற்று சாதனை படைப்பேனே தவிர ஒரு போதும் வரலாற்றுப் பிழை ஏற்படுத்த மாட்டேன் என்று ஆளுநர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து காரைக்கால்மேட்டில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மற்றும் திருமலை ராயன்பட்டின அங்கன்வாடி மையத்திற்கும் ஆளுநர் சென்று பார்வையிட்டார். பின் காரைக்காலில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு பகுதியில் உள்ள சனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார்.

Categories

Tech |