Categories
மாநில செய்திகள்

மக்களே…. தமிழகத்தில் 31 மாவட்டங்களில்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதனால் மாநில முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன் பலனாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட தளர்வுகளை அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.

இந்நிலையில் மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் 31 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. காஞ்சிபுரம், குமரி, கரூர், மதுரை ,மயிலாடுதுறை, நாகை, நாமக்கல் ,நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை ,தென்காசி, தஞ்சை, தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, விழுப்புரம், விருதுநகரில் இன்று யாரும் கொரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை.

Categories

Tech |