தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களிலும் நடைபெற உள்ளது. இதனால் மின் வினியோகம் பின்வரும் நாட்களில் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் பொன்னேரி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நடைபெற இருப்பதால் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வருகின்ற 27-ஆம் தேதி மின் வினியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வருகின்ற வியாழக்கிழமை அன்று ( ஜன.27 ) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே புதுவயல் ( சாக்கவயல் ) துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் கண்டனூர், புதுவயல், சாக்கோட்டை, பெரியகோட்டை, மித்திராவயல், வீரசேகரபுரம், பீர்க்கலைக்காடு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மேலும் வருகின்ற 29-ஆம் தேதி சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை, வேலாயுதபுரம், பெரிய புளியம்பட்டி உள்ளிட்ட துணை மின் நிலையங்களுக்கு மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. எனவே சனிக்கிழமை அன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை, பரமேஸ்வரி மில், பெரிய புளியம்பட்டி, பந்தல்குடி, வெம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்.