திருவாரூரில் முதல் தவணை தடுப்பூசி போட்டால் ஊராட்சி நிர்வாகம் 300 ரூபாய் பரிசு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் சுகாதார துறையினர் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி சொல்லிக் கொள்பவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூபாய் 300 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் 300 ரூபாய் செலுத்தப்பட்டது.