Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களே! சொப்பன சுந்தரிய இவங்க தான் வச்சிருக்காங்க….. பிரபல இயக்குனர் வெளியிட்ட வீடியோ….. செம வைரல்….!!!!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சுழல் என்ற வெப்சீரிசின் வெற்றியை தொடர்ந்து டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை எல்.ஜி சார்லஸ் இயக்க, அஜ்மல் தஹ்சீன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஹம்சினி என்டர்டைன்மெண்ட்ஸ் மற்றும், கியூ பாக்ஸ் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதனையடுத்து படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டைட்டில் ப்ரோமோ தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தலைப்பு சொப்பன சுந்தரி ஆகும். இந்த வீடியோவை இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் மக்களே சொப்பன சுந்தரி இவங்கதான் வச்சுருக்காங்க என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |