Categories
தேசிய செய்திகள்

மக்களே சூப்பர்….! பெண்களுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, இன்னும் பல…. காங்கிரஸ் சொன்ன குட் நியூஸ்….!!!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.1,500 நிதியுதவி அளிக்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதியளித்துள்ளார்.

வரும் 12ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. இதனை ஒட்டி அங்குள்ள பகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக இமாச்சலப் பிரதேச மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். பெண்களுக்கு மாதம் 1500 நிதி உதவி அளிக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது முதல் மந்திரி சட்டசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் பழைய ஓய்வூதி திட்டத்தை அமல்படுத்த பணம் இல்லை என்று பாஜக அரசு சொல்கிறது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |