ஐசிஐசிஐ வங்கியின் புதிய செயலி மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியின் பாக்கெட்ஸ் செயலி மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த செயலின் வாலெட் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்து பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதத்திற்கு அதிகமான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஜனவரி 25ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.