Categories
மாநில செய்திகள்

மக்களே….! சிரித்த முகத்துடன் போங்க….. சிறப்பாக வாங்க….!!!!

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 16 தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

தடுப்பூசி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்த நிலையில் நேற்று கிறிஸ்மஸ் பண்டிகை என்பதால் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. அதேபோல அடுத்த வாரம் சனிக்கிழமை புத்தாண்டு என்பதால் அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்றும், அதற்கு பின்னர் வழக்கம்போல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |