கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய தேவைகளுக்கு கூட பணத்தை புரட்டுவது சிக்கலாகிவிட்டது. அவசர கால கடன்களை பொறுத்தவரையில் நகை கடன் சிறந்தது. ஏனென்றால் நகை கடன்களை உடனடியாக வாங்கிவிட முடியும். அதுமட்டுமல்லாமல் செக்யூரிட்டி ஆவணங்கள் எதுவும் தேவை இல்லை. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடன் சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி எஸ்பிஐ வங்கியில் யோனோ ஆப் மூலம் நகை கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் 0.75% வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த சலுகையை செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே போட முடியும். அதன் மூலம் குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம். அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தபடியே மொபைலில் யோனோ ஆப் மூலம் நகை கடனுக்கு விண்ணப்பித்து வட்டி சலுகை பெற முடியும் என எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.
இந்த சலுகை பெறுவதற்கு முதலில் மொபைலில் எஸ்பிஐ யோனோ ஆப் இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதில் கடன் பிரிவில் நகை கடனை தேர்வுசெய்து விண்ணப்பிக்கலாம். தற்போது நகை கடன்களுக்கு எஸ்பிஐ வங்கி 8.25% வட்டி விதிக்கிறது. ஆனால் யோனோ ஆப் மூலமாக விண்ணப்பித்தால் 0.75% வட்டி தள்ளுபடி கிடைக்கும். அதன்படி 7.5% வட்டிக்கு நகை கடன் பெற்றுக் கொள்ள முடியும்.