தற்போது தீபாவளி மற்றும் சத் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோது வருகிறது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில சரக்கு பொருட்களுக்கு ரயில்வே தடை விதித்து இருக்கிறது. அந்த பொருட்களுடன் பயணிகள் ரயிலில் பயணம் செய்ய முடியாது அப்படி பயணம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை, அபராதமும் காத்திருக்கிறது. இது தொடர்பாக முன் எச்சரிக்கை பதிவு மற்றும் அறிவுரைகளை வழங்கியிருக்கும் இந்திய ரயில்வே அனைத்து ரயில் நிலையங்களில் இது தொடர்பான போஸ்டர்களை ஒட்டி உள்ளது. அதில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்ல வேண்டாம் அவை மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
மேலும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், பட்டாசு, கேஸ் சிலிண்டர், கன் பவுடர் போன்ற பொருட்களை கொண்டு செல்லாதீர்கள் என பயணிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. ரயிலுக்குள் அடுப்பு, கேஸ், ஓவன் போன்றவற்றை பற்றவைக்க வேண்டாம் எனவும் அதே சமயம் ரயில் பெட்டியிலோ அல்லது ரயில் நிலையத்திலும் சிகரட்டை பற்ற வைக்காதீர்கள் ரயிலில் எறியக்கூடிய மற்றும் வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது பிடிபட்டால் அது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 மற்றும் 165 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய வழக்கில் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.