மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர் ஓவியங்களை வரைந்து அனுப்பினர். அந்த ஓவியங்கள் அனைத்தும் நாகர்கோவிலில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் வரைந்த ஓவியங்களை ஒரு குழுவினர் ஆய்வு செய்து சிறந்த ஓவியத்தை அறிவிப்பார்கள். இந்நிலையில் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் அளிப்பதற்கு பதிலாக காவல் உதவி என்ற ஆப்பை பயன்படுத்தி புகார் அளிக்கலாம். மேலும் நீங்கள் அளிக்கும் புகார் மேல் அதிகாரிகளுக்கும் செல்லும் எனவும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.