Categories
உலக செய்திகள்

மக்களே.! கம்மியா சாப்பிடுங்க.. உத்தரவு போட்ட அதிபர்… ஏன் தெரியுமா?

வடகொரியாவில் உணவுத் தட்டுப்பாடின் காரணமாக அதிபர் கிங் ஜான் அன் மக்களை குறைவாக சாப்பிடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஐநா சபை மற்றும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தியதன் காரணமாக பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் வட கொரியா நாட்டில் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா தோற்று பரவி வந்த நிலையில் வட கொரியா எல்லைகளை மூடியுள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களையும் கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே நிறுத்தி விட்டதால் வடகொரியாவில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த  1994-1998 ஆண்டுகளில் நிலவியது போன்ற உணவுத் தட்டுப்பாடு வரும் என்று வட கொரிய அதிகாரிகள் ஏப்ரல் மாதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்  நாட்டு மக்களை குறைவாக சாப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு மக்களுக்கு பெரும் வேதனை அளிக்கிறது.  இந்த உணவு தட்டுப்பாடு 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கும். மேலும் வடகொரியா 2025 ஆம் ஆண்டுவரை எல்லைகளை திறப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று வட கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, “தற்போது நிலைமை மிக மோசமாக இருப்பதால் வரும் குளிர் காலத்தில் எங்களால் வாழ முடியுமா என்பது தெரியவில்லை. மேலும் 2025 ஆம் ஆண்டு வரை கஷ்டங்களை சகித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவது எங்களை பட்டினி கிடந்து சாகசொல்வதற்கு சமம் ” என்று கூறுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |