Categories
மாநில செய்திகள்

மக்களே கட்டாயம்…. இனி பெட்ரோல் கிடையாது – அதிரடி அறிவிப்பு…!!

சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்று வாசகம் ஒட்டுமாறு பெட்ரோல் பங்குகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஹெல்மெட் அணிவதால் என்ன நன்மை என்பது குறித்து விழிப்புணர்வும் செய்து வருகிறது. ஒரு சிலர் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் திடீரென ஏற்படும் சாலை விபத்தில் தலையில் அடிபட்டு உயிர் இழந்து விடுகின்றனர். ஆனால் ஹெல்மெட் அணிந்து செல்லும்போது அப்படி எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்படும்  பட்சத்தில் தலையில் அடிபட்டு உயிரிழப்பதை நம்மால் தவிர்க்க முடியும்.

மேலும் கார் ஓட்டுபவர்களுக்கு சீட் பெல்ட் அணிவது முக்கியத்துவம் என்றும்  காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹெல்மெட் இல்லை, சீட்பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற வாசகத்தை சென்னையில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் காட்சிப்படுத்த போக்குவரத்து போலீசாருக்கு ஆணையர் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட பெட்ரோல் சப்ளை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |