Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க..! உலுக்கி எடுக்கும் கொரோனா… பெரம்பலூரில் கோர தாண்டவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 672 பேருக்கும், அரசு மருத்துவமனையில் 62 பேருக்கும் என மொத்தம் 734 பேருக்கு சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அதில் கொரோனா தொற்று 31 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 518 பேரும், பெரம்பலூர் ஒன்றியத்தில் 1,168 பேரும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 488 பேரும், வேப்பூர் ஒன்றியத்தில் 602 பேரும் என மொத்தம் கொரோனாவால் 2,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கொரோனாவுக்கு 256 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மதனகோபாலபுரம், டால்பின் நகர், துறைமங்கலம், மேட்டுத்தெரு, தீயணைப்பு வளாகப்பகுதி, களரம்பட்டி, இரூர் ஊராட்சிகள், சிறுவாச்சூர், குரும்பலூர் பேரூராட்சி பகுதிகள், லெப்பைகுடிகாடு ஆகியவை கொரோனா பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறையினர் பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 34 ஆயிரத்து 930 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |