Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… ரசாயன மாம்பழம்… வெளியான பகீர் சம்பவம்…. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!!

ரசாயன முறையில் மாம்பழங்களை பழுக்க வைக்கும் சம்பவம்  வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாம்பழம் பண்டைய தமிழகத்தில் முக்கனிகளுள் ஒன்றாகும். இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசியப் பழமாக மாம்பழம் உள்ளது. மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் சுண்டி இழுக்கும் சுவைக் கொண்டது. இவ்வாறு இனிப்பும், புளிப்பும் ஒரு சேர கலந்த வித்தியாசமான சுவையை கொண்ட மாம்பழங்கள் கோடை கால சீசன் பழமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் கோடை கால சீசன் தொடங்கி விட்டாலே செந்தூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமானி, காதர், இமாம் பசந்த் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் விதவிதமான ரகங்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம், நார்சத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை கொண்டு நம்  உடல் நலத்தை பாதுகாக்க கூடியது. தற்போது வியாபாரிகள் சிலரின் பேராசை குணத்தால்  விஷத்தன்மை கொண்டதாக மாற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாமரத்தில் இருந்து பறிக்கப்படும் மாங்காய்கள் இயற்கையாக பழுக்க குறைந்தபட்சம் 5 நாட்களில் இருந்து 1 வாரம் கால அவகாசம் ஆகும் . இந்நிலையில் அந்த அளவிற்கு பொறுமை காக்க முடியாத சில வியாபாரிகள், கொட்டி வைக்கப்படும் மாங்காய்களுக்கு நடுவில் கார்பைடு கற்களை வைத்து மற்றும்  கார்பைடு கரைசல் கலந்த நீரில் ஊற வைத்து,பின் 12 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் பழுக்க வைக்கப்பட்டு, விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இது போல கார்பைடு ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு தீங்கு ஏற்படுகிறது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியை சுற்றியுள்ள சேர்விளாகம், வடவானூர், ராஜாம்புலியூர், காவக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மாமரத் தோப்புக்களில் இருந்து பறிக்கப்படும் மாங்காய்களை கார்பைடு கரைசல் நீரில் 15 நிமிடம் ஊற வைத்து பிறகு, துணி துவைக்கும் பவுடர் கலந்த நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்து, அதனை தேங்காய் நாற்களைக் கொண்டு தேய்த்து கழுவி பழமாகவும் மற்றும் பளபளப்பாகவும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இதேபோல் ரசாயனம் கலந்த நீரில் ஊற வைத்து மாம்பழங்களை தேங்காய் நாற்களைக் கொண்டு தேய்க்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற ரசாயனத்தால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவதால், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகள்  நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இதனை தவிர்க்க கடைகளில் இருந்து வீட்டிற்கு வாங்கி வரப்படும் மாம்பழங்களை, சுத்தமான நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்த பின், தோலை நீக்கி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவதை பெருமளவு குறைக்கப்படும். இவ்வாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

Categories

Tech |