Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. ரசாயன பவுடர் தூவி கொள்ளையடிக்கும் மர்ம நபர்கள்…. ஆத்தூரில் பரபரப்பு சம்பவம்….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கடைவீதி சாத்தனார் தெருவில் சேகர் (வயது 53) என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை உரிமையாளர் ஆவார். இவருக்கு மங்கையர்கரசி (வயது 48) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹசீனா என்ற துணிக்கடை உரிமையாளரும், மங்கையர்க்கரசியும் நேற்று முன்தினம் ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள வங்கியில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தொகை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தை பெற்றுள்ளனர். இதையடுத்து பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு இருவரும் தங்களது வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஹசீனா வண்டியை ஓட்டிச் செல்ல பின்சீட்டில் பண பையுடன் மங்கையர்கரசி அமர்ந்திருந்தார். இந்த நிலையில் திடீரென மங்கையர்க்கரசியின் முதுகில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஹசீனாவின் துணிக்கடைக்கு சென்று முதுகு பகுதியில் ஏற்பட்ட அரிப்பு என்னவென்று ? பார்க்கும் போது மங்கையர்க்கரசியின் கையில் இருந்த பணப்பை காணாமல் போனது கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதன்பிறகே மங்கையர்க்கரசியின் கவனத்தை திசைதிருப்பி அவருடைய உடலில் அரிப்பு ஏற்படும் ரசாயன பவுடரை தூவி பணப்பையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் மங்கையர்கரசி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |