இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் சேலம் கெங்கவல்லியை சேர்ந்த வாலிபர் முத்துக்குமார். இவருக்கு கடந்த ஜூலை எட்டாம் தேதி குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் பகுதி நேர வேலையாக நிறைய சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி நூறு ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அனுப்பி உள்ளார். அதன் பிறகு 15,000 மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 15 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால் இதுவரை அதற்கான பதில் எதுவும் வராததை தொடர்ந்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.