Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பேஸ்புக் மூலம் ஆன்லைன் மோசடி…. இதை யாரும் தப்பி தவறி கூட செய்யாதீங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதாவது ஆன்லைனில் மோசடி நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. அதே சமயம் தினம்தோறும் மோசடிகளை நிகழ்த்த பல்வேறு வகையான உத்திகளை மோசடிதாரர்கள் கையாளுகிறார்கள். இதனால் மக்களும் தங்கள் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர்.எனவே இது தொடர்பாக மக்களுக்கு பல விழிப்புணர்வுகள் அவ்வபோது ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன.எந்த ஒரு வித்தியாசமான லிங்க் உங்களுக்கு அனுப்பப்பட்டால் அதனை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பேஸ்புக் மூலமாக ஆன்லைன் மோசடி அரங்கேறியுள்ளது. 51 வயதான பெண் ஒருவர் தனது சேமிப்பு பணமான 8. 46 லட்சத்தை இழந்துள்ளார்.

இவர் பேஸ்புக்கில் 200 ரூபாய்க்கு buy one get one என்ற ஆஃபரில் உணவு வாங்குவதற்காக ஒரு லிங்கை கிளிக் செய்துள்ளார்.அதில் அந்த பெண்ணின் வங்கி தொடர்பான தகவல்கள் அனைத்தும் கேட்கப்பட்ட நிலையில் அவர் தகவல்களை நிரப்பி சமர்ப்பித்த பிறகு இவரின் சேமிப்பு பணமான 8.46 லட்சம் அப்படியே திருடப்பட்டது.இது தொடர்பாக போலீசில் அவர் புகார் அளித்த நிலையில் மக்களுக்கு தற்போது இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |