பைசர் மற்றும் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது.
இந்நிலையில் பைசர் -பயோன்டெக் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட போர்ச்சுக்கல் செவிலியர் ஒருவர் உயிரிழந்ததை அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்தி கொண்ட அவர், எந்த அறிகுறியும் பாதிப்பும் இன்றி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் தடுப்பூசியில் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இதைப் பற்றி விசாரணை நடத்த அந்நாடு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.