Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… சீனாவில் கொரோனா பரவல் தீவிரம்… கண்காணிப்பை தீவிரபடுத்த நடவடிக்கை…!!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். மேலும் புத்தாண்டு மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களின் போது உஷாராக இருப்பது மட்டுமல்லாமல் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் எனவும் அவர் மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா பிஎப் 7 சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் ஜெகதீஷ் தன்கரும்  முக கவசம் அணிந்தபடி சபைகளை நடத்தியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அறிக்கை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களாவன,

*உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு சராசரி 5.87 லட்சமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் தற்போது தினசரி பாதிப்பு 153 என்ற அளவில் உள்ளது.

*சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறது. மேலும் தற்போதைய சவாலை நிர்வகிக்க குறிப்பிட்ட தலையீடுகளையும் முன்மொழிந்துள்ளது.

*புதிய வைரஸ் தொற்றை குறைக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இந்திய விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகள் இரண்டு சதவீதத்தினருக்கு விமான நிலையங்களில் பரிசோதனை செய்வது இன்று முதல் தொடங்கியுள்ளது.

*கொரோனா தொற்று நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதனால் நமது விடாமுயற்சியுடனும், உறுதியுடனும் கொரோனாவிற்கு எதிரான போரை நாம் ஒன்று சேர்ந்து தொடர வேண்டிய தேவை உள்ளது.

*எதிர்வரும் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு முககவசம் அணிதல் கை சுத்தம் பராமரித்தல் மற்றும் சுவாச சுகாதார செயல்பாடுகள் போன்றவற்றை கொரோனா நெறிமுறைகளை மக்கள் பின்பற்றி நடக்க வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.

*இதனை அடுத்து மாநிலங்களவையில் நேற்று பேசிய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக்  மாண்டவியா, “தற்போது சர்வதேச பயணிகள் இரண்டு சதவீதத்தில் இருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தாலும் தேவை ஏற்பட்டால் அனைத்து இடங்களிலும் கொரோனா பரிசோதனை நடத்துவதை கட்டாயமாக பரிசீலிக்கப்படும்” என கூறியுள்ளார்.

Categories

Tech |