Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…!! “சிலிண்டர் போட வந்த இளைஞன்…. 87 வயது மூதாட்டியை கற்பழித்த கொடூரம்…!!”

டெல்லியின் திலக் நகரில் பகுதியில் 87 வயது நிரம்பிய மூதாட்டியின் அவருடைய மகளுடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவருடைய மகள் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்கு சென்றதாக கூறப்படுகிறது. மூதாட்டி மட்டும் வீட்டில் தனியே இருந்ததை அறிந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியை கடுமையாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு வீட்டில் இருந்த செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் திருடிச் சென்றுள்ளார். சந்தைக்கு சென்ற மூதாட்டியின் மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தன் தாய் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தொடர்ந்து போலீசில் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார் சிலிண்டர் விநியோகம் செய்ய வந்த நபர்தான் மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றது கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |