குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இயங்கி வரும் மெக்டொனால்டு கடைக்கு பார்கவ் ஜோஷி என்பவர் தன் நண்பர்களுடன் சென்றார். இவர் பர்கர் மற்றும் கோக் குளிர்பானம் போன்றவற்றை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து கோக் குடித்து கொண்டிருந்த போது அந்த பானத்தில் 1 பல்லி இருந்துள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பார்கவ், உடனடியாக அதனை படம்பிடித்து வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டார்.
இவ்வீடியோ உடனே சமூகவலைதளங்களில் வைரலாகியது. அதன்பின் ஆமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக செயல்பட்டு ஆய்வு மேற்கொண்டு, கடைக்கு சீல் வைத்தனர். அத்துடன் குளிர்பானத்தின் மாதிரியை எடுத்து பொதுசுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் குளிர்பானத்தில் இறந்த பல்லி கிடந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகஊடகங்களில் வெளிவந்து வைரலாகிய சூழ்நிலையில், மெக்டொனால்டு கடைக்கு ஆமதாபாத் மாநகராட்சி ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.