காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் அண்மையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பட்டியலினத்தவர் ஆணையர் துணை தலைவர் அருண் ஹால்டர், இறந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் 72 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதாக கூறிய அவர், கழிவுநீரை அகற்றுவதற்கு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் தொட்டியில் மனிதர்களை இறக்கினால் சிறை தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தார். மேலும் இதுகுறித்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.