சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் முதல் அலை , இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் மிக வேகமாக பரவும் திறன் கொண்ட 2 புதிய வகை மாறுபாடுகள் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது ஓமைக்ரான் வைரசின் பிஎப் 7 மற்றும் பிஏ.5.1.7 வகை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவ வல்லுநர்கள் கூறியதாவது. பிஎப் 7, பிஏ.5.1.7 வகை மாறுபாடுகள் மிகவும் எளிதாக தொற்றும் தன்மை கொண்டவை. இதற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டாலும் கூட பிஎப் 7 மாறுபாடு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கொரோனா தடுப்பூசிகள் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படாமலும், வைரஸால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறியுள்ளனர். மேலும் இந்த பிஎப் 7 வகை மாறுபாடு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என உலக சுகாதாரத் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.