Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படலாம்….. உடனே கிளம்புங்க…. எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருகிறது. அதன்படி  மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் அதன் உபரி நீர் எந்த நேரத்திலும் கிளி ஆற்றில் திறந்து விடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மதுராந்தகம் ஏரியிலிருந்து இன்று இரவு அல்லது நாளை உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் கிளி ஆற்றின் கரையோரம் உள்ள 21 கிராமங்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |