Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… உங்கள் போனில்… தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்காக ஏதாவது அழைப்பு வந்தால் பொது மக்கள் நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் உரு மாறியுள்ள புதிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளிக்க கோரி அழைப்பு வந்தால் பொது மக்கள் நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அரசு அதிகாரிகள் பேசுவதாக போனில் அழைத்து, ஆதார் எண்ணை அளிக்கக் கோரி, அதன் பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு ஓட்டி வரும் என்று கூறி நமது விவரங்கள், வங்கி தொகை ஆகியவற்றை திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |