தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வங்கியிலிருந்து பேசுவது போல நடித்து ஆன்லைன் மூலமாக பணம் சுருட்டும் கும்பல் அதிகரித்துள்ளது. அவர்கள் ஏதாவது ஒரு மொபைல் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது அல்லது வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று கூறி அனைத்து தனிநபர் விவரங்களையும் கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். இது போன்ற மக்கள் யாரும் மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன் பின் தெரியாமல் ஃபேஸ்புக்,வாட்ஸ்அப் மூலம் பேசுபவர்களை நம்பி பணம் கொடுத்து ஆன்லைன் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஃபேஸ்புக்,வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள் என பழகும் நபர்களுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இணையதளம் மூலமாக திருமணம்,மறுமணத்திற்கு வரன் தேடுவோர், பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறி மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.