ஆப்பிரிக்க நாடான கம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக சமீபத்தில் வெளியான தகவல்கள் உலகமெங்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சினைக்குரிய இந்த மருந்துகளை இந்தியாவில் அரியானாவின் சோனி பட்டில் உள்ள மெய்டன் பார்மல் சூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இந்தோனேசியாவில் திரவ வடிவமான மருந்துகளை சாப்பிட்ட நூறு குழந்தைகள் இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் இந்தோனேசியா நாட்டில் அனைத்து விதமான திரவ மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது பற்றி இந்தோனேசியா அரசு பேசும்போது திரவ வடிவிலான சில மருந்துகளில் கடுமையான சிறுநீர் காயத்தை ஏற்படுத்துகிற நச்சுப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் 99 இளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றனர் என கூறியுள்ளது. மேலும் இந்தோனேசியா சுகாதார மந்திரி புதி குணாதி சாதிகின் பேசும்போது, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சிறுநீரக காயம் ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கு தரப்பட்ட மருந்துகளில் டைதிலின் கிளைக்கால் மற்றும் எத்திலின் கிளைக்கால் செய்யப்பட்டது அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவர் என்பது பற்றி தகவல்கள் இதுவரை இல்லை என தெரிவித்துள்ளார்.