Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இன்னும் 5 நாட்கள் “இங்கெல்லாம் மழை பெய்யும்”…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

அடுத்து 5  நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில்  நிலவிய காற்றழுத்த தாழ்வு  மண்டலம் தற்போது வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது தற்போது  தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில்  இடி மின்னலுடன் அடுத்த 5  நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் அடுத்த  2  நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் தெற்கு ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, மன்னார் வளைகுடா ஆகிய கடலூர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |