உலகில் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை,அனைவரும் விழிப்புடன் இருக்கவும் கண்காணிப்பை பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் அனைவரும் நெரிசலான பகுதிகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவே அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.