இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அரசின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவியது. இதனால் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், தடுப்பூசி கட்டாயம் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும் மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் பின்பற்ற தொடங்கியதன் காரணமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது. தொற்று குறைய தொடங்கியதால் மீண்டும் மக்கள் பொது இடங்களுக்கு சுதந்திரமாக நடமாட ஆரம்பித்தனர்.
இதனால் தமிழகத்தில் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை, எனவும் விரும்பினால் சமூக இடைவெளியை கடைபிடிக்கலாம் எனவும் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. பிற நாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் தற்போது தொற்று அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்டிப்பாக மாஸ்க் அணியும்படி வலியுறுத்தப்பட்டிருக்கிறது.