மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் மின் கட்டணம் துண்டிக்கப்படும் என வரும் அழைப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இப்படி வந்த மோசடி அழைப்பினால் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அவருடைய பணம் 2.46 லட்சத்தை இழந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது ஓய்வு பெற்ற ஆசிரியர் இந்த மாத மின் கட்டணத்தை செலுத்துமாறு சகோதரரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரும் ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் செலுத்திவிட்டு அதற்கான ரசிதையும் பெற்றுவிட்டார். இதற்கிடையே ஆசிரியருக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது.
அதில் மின்கட்டணம் செலுத்தவில்லை உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கூறப்பட்டபடி அந்த எண்ணுக்கு பத்து ரூபாய் பணம் அனுப்ப அவருக்கு வந்த ஓடிபி எண்ணை கூறுமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது அவரும் தனக்கு வந்த ஓடிபி என்னை கூறியுள்ளார். இதனை அடுத்து சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 2.46 லட்சம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்த போது தான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார் உடனடியாக இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.