Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மக்களே உஷார்..! இதய நோயால் 31% உயிரிழப்பு.. எப்படி சமாளிப்பது..?

இதயத்தால் ஏற்படும்  நோய்களை இவ்வித முறையில் பின்பன்றினால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடலின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நம் இதயத்தின் ஆரோக்கியமானது நம் உணவுப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  தகவல்  வெளியிட்டுள்ளது.  உலக அளவில் 17. 9 மில்லியன் மக்கள் இதய நோய்களால் மட்டுமே கடந்த 2016ஆம் ஆண்டில் இறந்துள்ளனர்  என்பது குறிப்பிடதக்கது.

உலக அளவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 31% ஆகும்.இவற்றில் இதய நோய்களால் 85% உயிரிழப்புகள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பினால் ஏற்படுகின்றன. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இதய நோய் மருத்துவர் டாக்டர் எம் எஸ் எஸ் முகர்ஜி  இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார். ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை ஆரோக்கியமான ஒருவரின் இதய துடிப்பானது துடிக்கும். மேலும் அதன் ரத்த அழுத்தமானது 120/ 80 என்று  இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குருதியூட்டக்குறை இதய நோய், வால்வுலர் இதய நோய், கன்ஜெனிடல் இதய நோய்,இதயத்தாள  இடையூறுகள், பெரிகார்டியல் நோய் மற்றும் இதய புற்றுநோய், இதய தசை நோய் போன்ற  இதயத்தில் ஏற்படும் நோய்களை குறித்து கூறியுள்ளார்.  இவற்றிலிருந்து நம் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மனிதனின் வளமான வாழ்விற்கு வழிவகுக்கும் என்றும் அதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Diagnosing Heart Disease | Patient Education | UCSF Health

உணவில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை தவிர்ப்பதன் மூலமும், கார்போஹைட்ரேட்,இனிப்புகள், மது இவற்றை குறைத்துக் கொள்வதன் மூலமும், மருத்துவரிடம் ஆலோசித்து முட்டை எடுத்துக்கொள்வதன் மூலமும், ஆட்டு இறைச்சிக்கு பதிலாக கோழியின் இறைச்சியை உண்ணுவதன் மூலமும், புகைப்பழக்கம் இருந்தால் அறவே தவிர்ப்பதன் மூலமும், தினம்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் நம் உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயலும் என்று கூறியுள்ளார். மேலும் பிரஷ்ஷான பழங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும்  உலர் பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் காரணிகளை  கண்டறிந்து இதய பாதிப்புகளை ஏற்படுத்துவதை தவிர்க்கலாம் என்றும்,  நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மேலும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளார். உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள பிஎம்ஐ (BMI) வைத்து தெரிந்து கொள்ளுமாறும் கூறியுள்ளார். இயன்றவரை மனதிற்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது உடல்நலத்திற்கு ஆரோக்கியத்தை தரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |