Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… “ஆன்லைன் மூலம் கடன் வாங்குகிறீர்களா?”…. அப்போ இதை கட்டாயம் படிங்க எச்சரிக்கை அறிவிப்பு….!!

சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள மாதனாங்குப்பம், நேதாஜி தெருவில் கணவனை இழந்த பெண்ணொருவர் வசித்து வருகிறார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணி புரிந்து வருகிறார். இவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன் செல்போனின் மூலம் ஒரு தனியார் கடன் அளிக்கும் நிறுவனம் ஊழியர் உங்களுக்கு கடன் வேண்டுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் தனக்கு ரூ.30 ஆயிரம் கடன் வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த ஊழியர் அடையாள அட்டை, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் தங்கள் தொலைபேசி எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அவரும் அதை நம்பி போட்டோ அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி உள்ளார்.

இதனிடையில் கடந்த வெள்ளிக்கிழமை கடன் கொடுக்கும் நிறுவனத்திலிருந்து அப்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் தொகை தயாராகி விட்டது. ஆனால் அதற்கு முன்பாக ரூ.3000 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் தனக்கு பணம் கஷ்டம் இருப்பதால்தான் கடன் கேட்கிறேன், ‘என்னால் பணமெல்லாம் கட்ட முடியாது’ என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாலை அந்தப் பெண்ணின் புகைப்படத்தை தவறான முறையில் சித்தரித்து அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவருக்கு தெரிந்தவர்களுக்கும் சிலர் அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் அம்பத்தூர் பஸ் நிலையத்தில் அதிகமான வலி நிவாரணி மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனையடுத்த அந்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, புகைப்பிடித்து சித்தரித்து அனுப்பிய தனியார் நிறுவன ஊழியர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |