இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருந்தே ஒரு சில நிறுவனங்களுள் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சில நிறுவனங்கள் போலியான விளம்பரத்தை கொடுத்து வீட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து ஏமாற்றி மோசடி செய்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆன்லைன் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள், 20 சிம்கார்டுகள், 26 ஏடிஎம் கார்டுகள், 37 வங்கி காசோலைகள், 56 போலி முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 78 பேர் ரூ.2.45 கோடி பணத்தை இந்த கும்பலிடம் இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, மக்களே கவனமாக இருங்கள்.