Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்! ஆன்லைனில் உணவு…. 11 லட்சத்தை பறிகொடுத்த மூதாட்டி…. பெரும் பரபரப்பு….!!!!

நாடு முழுவதும் தற்போது பல்வேறு இடங்களில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி, தனது செல்போனில் ஆன்லைன் மூலம் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இதற்காக அவரது வங்கி கணக்கில் இருந்து 9,999 ரூபாய் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் உலர் பழங்கள் ஆர்டர் செய்தார் இதற்காக 1,146 ரூபாய் செலுத்தினார்.

இதையடுத்து தனது கணக்கில் இருந்து அதிக பணம் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி, இணையதளத்தில் முகவரியை தேடி ஒரு போன் நம்பரை தொடர்பு கொண்டுள்ளார். அதில் பேசியவர் மூதாட்டியின் அறியாமையை பற்றி தெரிந்து கொண்டு, மொபைல் போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறியுள்ளார். அவர் ஏமாற்றுகிறார் என்பதைக்கூட அறியாத அந்த மூதாட்டி அவன் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.

அப்போது அந்த நபர் மூதாட்டியிடம் அவரது வங்கி கணக்கு, ரகசிய குறியீடு எண் போன்ற விவரங்கள் அனைத்தையும் வாங்கினான். அதை நம்பி மூதாட்டியும் எல்லா தகவல்களையும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 11,78,000 ரூபாய் எடுக்கப்பட்டது. இது பற்றி அவருக்கு குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினர் மோசடி செய்தவரை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |